Ads (728x90)

ஒரு ஏக்கருக்கும் குறைந்த பரப்பிலான வயல் காணியில் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறைக் கொண்ட யூரியா பசளை இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 3 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா பசளை இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சகல விவசாயிகளுக்கும் அவசியமான யூரியா உள்ளிட்ட பசளையை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 55 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சத்திடும் நிகழ்வு நேற்று விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய இந்த முறை பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட பசளை வழங்கப்படவுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget