Ads (728x90)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் பூதவுடலுக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இலங்கை நேரப்படி நேற்று இரவு 7.30 – 7.45 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் இதன்போது பிரசன்னமாகியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறவுள்ளன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget