உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே இந்த அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாகின்றது.
உள்ளூராட்சி தேர்தலை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தமது ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment