Ads (728x90)

கொழும்பின் முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் உயர்நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்ற வளாகங்கள், சட்ட மா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம், காவல்துறை தலைமையகம், அகுரேகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம், கொம்பனித் தெரு விமானப்படை தலைமையகம், பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்ல பிரதேசம் என்பன அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget