இந்த பிரகடனத்தின்படி காவல்துறை மா அதிபரின் அனுமதியின்றி, அத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்துள்ள வீதி, மைதானம், கரை அல்லது ஏனைய திறந்தவெளி பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் யாவும் தடை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு, அதனை மீறுவோரை காவலில் வைப்பதற்கும், கருத்துச் சுதந்திரத்தை மீறுவதற்கும், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கும் கடுமையான விதிகளை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளின் கீழ் ஒரு குற்றச் செயல் தொடர்பாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேல் நீதிமன்றத்தை தவிர வேறு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட மாட்டாது என்று கூறுவதன் மூலம் பிணை தொடர்பாக கடுமையான விதிகளை இந்த உத்தேச உத்தரவு விதிக்கிறது என்று சட்டத்தரணிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு நியாயமான அல்லது சட்டப்பூர்வமான அடிப்படையும் இல்லாமல் இந்த உத்தரவு குடிமக்களின் சுதந்திரத்தை கணிசமாகக் குறைக்க முற்படுகிறது என்றும் சட்டத்தரணிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
.

Post a Comment