Ads (728x90)

பணம் செலுத்த முடியாததால் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் நிரப்பிய கப்பல் ஒன்று 08 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யூரல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஆகஸ்ட் 23ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகின்றது. 

குறித்த கப்பலுக்கு டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் நாளொன்றுக்கு தாமதக் கட்டணமாக மட்டும் 75,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

அதேசமயம் இந்த யூரல் கப்பலின் கச்சா எண்ணெய் மூலம் 52 சதவீதம் கறுப்பு எண்ணெய், 21 சதவீதம் டீசல் மற்றும் 12 சதவீதம் பெட்ரோல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget