Ads (728x90)

கைப்பேசி செயலியின் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்கள் லிட்ரோ எரிவாயுவை இலங்கையிலுள்ள தங்களது உறவுகளுக்கு டொலரில் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக எந்தவொரு நபருக்கும் இதற்கான செயலி ஊடாக கட்டணத்தை செலுத்தி தங்களது வீடுகளுக்கே எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும். அடுத்த வாரம் முதல் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாக இது அமையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget