Ads (728x90)

இலங்கைக்கு நேற்று முன்தினம் வருகைத்தந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்திருந்தார்.

இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில் எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி ரணிலை விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமந்தா பவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு ஜனாதிபதி, அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget