Ads (728x90)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக  மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத்தடையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத்தடையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு அந்தந்த பீடாதிபதிகளின் ஊடாகத் துணைவேந்தரால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்குள்ளும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget