நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ். நகரில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.
குறித்த மழையினை அடுத்து யாழ். பிரதான பஸ் தரிப்பு நிலையம் உள்ளிட்ட யாழ்.நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.
குறித்த பகுதிகளில் மழைநீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ்.நகரை அண்டிய பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் அதனை வெளியேற்றும் நடவடிக்கை யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சிட்ரங் சூறாவளியாக வலுவடைந்துள்ளது. நாளை காலை இந்த சூறாவளியானது பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment