அரச சேவையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனங்களின் உறுப்பினர்கள் நிதி அமைச்சிடம் கடிதம் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வேதனம் மற்றும் வாழ்க்கை செலவீன கொடுப்பனவினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொண்ட நிதி அமைச்சு விரைவில் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து தருவதாக சம்மேளனங்களின் உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையினால் அரச சேவையாளர்களுக்கு கிடைக்கின்ற வேதனம் குறைந்த பட்ச தேவைகளையேனும் பூர்த்தி செய்யப்போதவில்லை என தொழிற்சங்க உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment