மட்டக்களப்பைச் சேர்ந்த வீரக்குமார் ராகுலன், இராமநாதன் நவதீபன், வவுனியாவைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த ஜெபநேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வருமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய நால்வரில் இருவர் ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்திருப்பதனால் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் இருவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதனால் அது குறித்த உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியுள்ளதால் அவர்களது விடுதலையும் தாமதமடைந்துள்ளது.
பல வருடமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் ஆகிய 8 அரசியல்கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 40 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment