Ads (728x90)

கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தின் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து இடை­வி­ல­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு 485ஆக­வும், 2021ஆம் ஆண்டு 1,105 ஆக­வும், 2022 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் வரை­யில் 519 ஆக­வும் இடை­வி­ல­கிய மாண­வர்­கள் எண்­ணிக்கை உள்­ள­தாக வடக்கு மாகாணக் கல்­வித் திணைக்­க­ளம் தெரி­வித்துள்­ளது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக வடக்கு மாகாண கல்­வித் திணைக்­க­ளத்­தி­டம் கோரிய நிலையில் இத்தக­வல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

2020ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் ஆகக்­கூ­டு­த­லாக மடுக்­கல்வி வல­யத்­தில் 94பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர். மன்­னார் கல்வி வல­யத்­தில் 72பேரும், கிளி­நொச்சி தெற்கு கல்வி வல­யத்­தில் 52பேரும், கிளி­நொச்சி வடக்கு கல்வி வல­யத்­தில் 51 பேரும், முல்­லைத்­தீவு கல்வி வல­யத்­தில் 48 பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

அதி­க­ள­வில் ஆண்­களே இடை­வி­ல­கி­யுள்­ள­து­டன் 10ஆம் மற்­றும் 11ஆம் தரங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களே இதில் அதி­க­மா­க­வும் உள்­ள­னர்.

2021ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் ஆகக் கூடு­த­லாக கிளி­நொச்சி தெற்கு கல்வி வல­யத்­தில் 181 பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர். வலி­கா­மம் கல்வி வல­யத்­தி­லி­ருந்து 148 பேரும், மன்­னார் கல்வி வல­யத்­தி­லி­ருந்து 135 பேரும், கிளி­நொச்சி வடக்கு கல்வி வல­யத்­தி­லி­ருந்து 119பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

2022 ஆம் ஆண்­டின் ஏப்­ரல் மாதம் வரை­யில் வடக்கு மாகா­ணத்­தில் ஆகக் கூடு­த­லாக வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் 123 பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர். வவு­னியா வடக்கு கல்வி வல­யத்­தில் 110பேரும், மன்­னார் கல்வி வல­யத்­தில் 101பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

வறு­மை­ இதற்­குப் பிர­தான கார­ணம். அதனை விட கொரோனா காலத்­தில் பாட­சா­லை­க­ள் நீண்ட காலம் மூடப்பட்ட­த­மை­யால் மாண­வர்­கள் தொழில்­களை நாடிச் சென்ற சம்­ப­வங்­க­ள் இடம்­பெற்­றுள்­ளன. சில பெற்­றோர் தமது பெண் பிள்­ளை­க­ளுக்கு திரு­ம­ண­மும் செய்து வைத்­துள்­ள­னர் என்று வடக்கு மாகாண கல்­விப் பணிப்­பா­ளர் செ.உத­ய­கு­மா­ர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget