Ads (728x90)

இன்று தீபாவளி பண்டிகை உலகெல்லாம் உள்ள இந்துக்களாலும், சைவர்களாலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்களாலும், சைவர்களாலும் புனித நாளாக கருதப்படும் தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று வருகிறது. 

இந்நாளில் மக்கள் அதிகாலை எழுந்து தலையில் எண்ணெய் வைத்து முழுகுவார்கள். பின்னர் இறைவனை வழிபட்டு புத்தாடை அணிவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள்.

வீடுகளில் விதவிதமான பலகாரங்கள் இனிப்பு மற்றும் உணவு வகைகளை தயார் செய்து தீபாவளி பண்டிகையை வரவேற்பார்கள்.

இந்துக்கள் மற்றம் சைவர்களின் நம்பிக்கையின்படி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக தீபாளி கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவசாம் முடிந்து நாடு திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.



Post a Comment

Recent News

Recent Posts Widget