அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்களினால் நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெள சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு , நீர்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வௌ சிறிதம்ம தேரர் உணவை உட்கொள்ள முடியாமல் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது ஒரு கொலை முயற்சியாகும். எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த இருவரது உயிர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Post a Comment