Ads (728x90)

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகள் கொழும்பில் ஒன்றிணைந்து அடக்குமுறைகளுக்கு எதிரான ஒன்றிணைந்த பிரகடனத்தில்   கையொப்பமிட்டுள்ளனர்.

பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைக்கான சட்டங்களை இரத்து செய்தல், இச்சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட 06 விடயங்கள் இந்த பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களை முறையற்ற வகையில் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், புனர்வாழ்வு அதிகார சபைக்கான சட்டமூலத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் இந்த ஒன்றிணைந்த பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



 


Post a Comment

Recent News

Recent Posts Widget