Ads (728x90)

2022 பிஃபா (FIFA) உலக கோப்பை கால்பந்து போட்டி இம்முறை கத்தாரில் நடைபெறுகின்றது. மத்திய ஆசியாவில் பிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இன்று நவம்பர் 20ஆம் திகதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

22 ஆவது பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந்த 4 ஆண்டுகளாக 210 அணிகள் முயற்சித்தன. ஆனால் போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்கின்றது.

2022 பிஃபா உலக கோப்பைக்கு தகுதுி பெற்றுள்ள நாடுகள் 

அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா, கேமரூன், மொரோக்கோ, துனீஷியா, செனகல், கானா. உருகுவே. ஈக்குவடோர், ஆர்ஜென்டீனா, பிரேசில், போலந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோஷியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டாரிகா, ஆஸ்திரேலியா

இந்த 32 அணிகளும் நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

   குழு A: கத்தார், ஈக்குவடோர், செனகல், நெதர்லாந்து

    குழு B: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    குழு C: ஆர்ஜென்டீனா, சவுதி அரேபியா, மெக்சிக்கோ, போலந்து

    குழு D: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா

    குழு E: ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜேர்மனி, ஜப்பான்

    குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    குழு H: போர்த்துக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் கடைசி 16 அணிகள் இறுதி கட்டத்திற்கு முன்னேறும்.



Post a Comment

Recent News

Recent Posts Widget