Ads (728x90)

சுற்றுலா விசாவில் ஓமான், துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தடை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியின்றி சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர். 

அவர்கள் துபாய் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று அங்கிருந்து ஓமனுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். தற்போது நாங்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget