Ads (728x90)

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம்  அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசி, உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், பாம் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால், புத்தகங்கள், பேனாக்கள், காலணிகள், ரேப்பர்கள், டயர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 60 ரூபாவும், வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாவும், உருளைக்கிழங்கு கிலோ 220 ரூபாவும், கடலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாவும், வெண்ணெய் கிலோ ஒன்றுக்கு 550 ரூபாவும் மற்றும் பாலாடைக்கட்டி கிலோவுக்கு 600 ரூபாவாலும் செஸ் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இறக்குமதி செய்யப்படும் சோளம் 300 ரூபாவாலும், அப்பிள் 380 ரூபாவாலும், பாம் எண்ணெய் 60 ரூபாவாலும், கொப்பரா 370 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் இறப்பர் மற்றும் டயர்கள் 100 முதல் 400 ரூபா வரையிலும், பாதணிகளின் வகைக்கு ஏற்ப 90 முதல் 1840 ரூபா வரையிலும், பால்பாயின்ட் பேனாக்களின் விலை 25 சதவீம் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு கிலோ பயிற்சி புத்தகங்களுக்கு 250 ரூபாயும், ரேப்பர்களுக்கு 200 ரூபாயும், மசகு எண்ணெய் கிலோவுக்கு 300 ரூபாயும் வரி விதிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget