Ads (728x90)

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாவில் இருந்து 5,000  ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும், ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும், சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளுக்கு அமைய இவ்வாறு கடவுச்சீட்டு தொடர்பான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget