Ads (728x90)

2023 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரினால் 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதியிடப்பட்ட ED/09/Ads (SA)/7 என்னும் கடிதம் மூலம் 2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் 80 சதவீது வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த விலக்களிப்பு 2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும், 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயம் என்பதை கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget