Ads (728x90)

காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை இலங்கை துறைமுக அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.  

இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும். 

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும். அவற்றில் திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள் மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்களாகும்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும். 


Post a Comment

Recent News

Recent Posts Widget