Ads (728x90)

எந்தவொரு செல்வாக்கிற்கும் அடிபணியாமல் குறித்த நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கடசித்தலைவர்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் உள்ள 16 கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்த போதே புஞ்சிஹேவா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் என தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இது தொடர்பான உறுதிமொழியை வழங்கினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு எழுத்து மூலமான கோரிக்கை அடங்கிய கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடையூறு ஏற்படாத வகையில் பாடுபடுவோம் என இன்று கூடிய கட்சித் தலைவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் வாக்குறுதியும் அளித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget