சிறிலங்கா அதிகாரிகளும், சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரிவான நிதியுதவி வசதிகளின் கீழ் பெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துதலுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதிய குழுவின் பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இதனை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
Post a Comment