Ads (728x90)

நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கவும், முகம் நல்ல ஒரு ஜொலிப்புடன் இருக்கவும் சோப்பு, கிறீம் என்று செயற்கையாக பராமரிப்பு செய்து வருகிறோம். இதனால் நாளடைவில் குறைந்த வயதிலேயே நமது சருமமானது முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிறது. 

 சருமமானது ரொம்பவும் சென்சிடிவ் ஆனது. இதில் மெல்லிய துவாரங்கள் இருக்கும். இதனுள் நுழையக்கூடிய அழுக்குகள் மற்றும் கிருமிகள் துவாரங்களை அடைத்து விடும். இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேற முடியாமல் முகப்பருக்கள் உருவாகிறது. 

முகப்பருக்கள் உருவாவதோடு மட்டும் அல்லாமல் அதன் மூலம் பல்வேறு இடங்களுக்கு அவை பரவி மேலும் நம் முகத்தை மேடு, பள்ளமும் ஆக வடுக்களுடன் காலம் பூராவும் இருக்க வைத்து விடுகிறது. இப்படி எந்த விதமான முகப்பருக்களையும் விரட்டி அடித்து, நம் சருமத்தை ரொம்பவும் ஜொலிப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு முறை தான் ஆவி பிடிக்கும் முறையாகும். 

இந்த ஆவி பிடிக்கும் முறையை எப்படி முறையாக கையாண்டு சரும பராமரிப்பை மேற்கொள்ளலாம்? ஆவி பிடிப்பது என்றாலே நாம் ஜலதோஷம், தலை பாரம், சளி போன்றவை பிடித்திருந்தால் உடனே அதில் தைலத்தை சேர்த்து பிடிப்பதை நினைவிற்கு கொண்டு வருவோம். 

ஆவி பிடித்தல் நம்முடைய தலைபாரத்தை, தலைவலியை மட்டும் நீக்கக்கூடியது அல்ல. சருமத்திற்குள் ஊடுருவிச் சென்று அதில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கும் மேலும் அழுக்குகள், கிருமிகள் போன்றவற்றையும் அடியோடு ஒழித்துக்கட்டும் அற்புதமான முறை தான் இந்த ஆவி பிடிக்கும் முறையாகும்.

நீங்கள் பியுட்டி பார்லருக்கு சென்று சரும பராமரிப்பு மேற்கொள்ளும் பொழுதும், அதில் ஒரு பகுதியாக ஆவி பிடிப்பதை பார்த்திருக்க முடியும். ஆவி பிடிப்பதனால் சரும துவாரங்கள் விரிவடைகின்றன. விரைவாக அதனுள் சென்று இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கின்றன. இதனால் சருமமானது ரொம்பவும் பொலிவுடன் பளிச்சென இருக்க உதவியாகிறது. 

ஆவி பிடிப்பதற்கு உரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் நான்கைந்து சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல இதனுடன் நான்கைந்து சொட்டுக்கள் புதினா சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பத்து நிமிடம் ஆவது இடைவிடாமல் நல்ல கனமுள்ள போர்வையாக போர்த்தி ஆவி பிடியுங்கள். முகம் முழுவதும் எல்லா இடங்களிலும் படும்படி நன்கு ஆவி பிடிக்க வேண்டும். முகத்தில் இருந்து வியர்வையானது நன்கு வெளியேற வேண்டும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget