Ads (728x90)

அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது.

இன்று நடத்தப்படவுள்ள அமைதியான போராட்டத்தை நடத்துவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது இயக்கங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமை மீறல் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டால், நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனித உரிமை ஆணைக்குழு பொலிசாருக்கு வலியுறுத்தியுள்ளது.

இன்று கொழும்பில் தொழிற்சங்கங்கள், பொது இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டத்தை அவதானிக்க மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget