Ads (728x90)

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இன்று பிற்பகல் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கருகிலோ நடத்துவதற்கு அனுமதியில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது வீதிகளை மறிப்பதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், கடமைகளின் பின்னர் வீடு திரும்பும் மக்கள், கோட்டை மற்றும் புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இடையூறுகள் ஏற்படலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது வீதிகள் மறிக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதிகளை மறித்தால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படியும் வேறு சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் பொலிஸாரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget