Ads (728x90)

வலிகாமம் வடக்கில் தொடரும் நில அபகரிப்புகளை கண்டித்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கில் காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இதை தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனவும், வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்து இருந்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget