Ads (728x90)

பொதுவாக இரவு தூங்கி காலையில் எழுந்த பின் உள்ளுறுப்புக்கள் திறம்பட செயல்படுவதற்கு சிறிது நேரம் ஆகும். இதனை மீட்டு எடுக்க காலை உணவுகள் தான் பெரிதும் உதவுகின்றது.

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமானால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுவது அவசியமானது ஆகும்.

அந்தவகையில்  தற்போது காலை உணவிற்கு முன் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். அதுவும் பாதாமை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். இதில் மங்கனீஸ், வைட்டமின் ஈ, புரோட்டீன், நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 என்பன உள்ளன. 

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் உள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேற்றப்பட்டு, உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு, உடலுக்கு ஒருவித ஆற்றல் கிடைக்கும்.

அருகம்புல் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, செரிமான உறுப்புக்களின் செயல்பாடு மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும். அத்தோடு இது இரைப்பை, குடல் பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான அமில சுரப்பு போன்றவற்றையும் சரிசெய்யும். அருகம்புல்லில் உள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளதால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடல் தயாராகும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் மற்றும் இனிப்பு பொருட்களின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். உலர் திராட்சை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அமிலங்களை நடுநிலையாக்குகிறது.

பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான் சிறந்த வழி. அதோடு இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கும் சக்தியையும் கொண்டது. ஆகவே காலையில் எழுந்ததும் பப்பாளியை சாப்பிட்டால், 45 நிமிடம் கழித்து காலை உணவை சாப்பிடுங்கள்.

தர்பூசணியை காலையில் எழுந்ததும் உட்கொண்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, இனிப்புக்களின் மீதுள்ள ஆர்வம் தணியும். மேலும் ஒரு கப் தர்பூசணியில் 40 கலோரிகளே உள்ளன. மேலும் இதில் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லைகோபைன் அதிக அளவில் நிறைந்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget