Ads (728x90)

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வியின் நடைமுறை பயன்பாட்டை மார்ச் 2023 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

தாய்மொழிக்கு மேலதிமாக ஆங்கிலத்தை சர்வதேச மொழியாக கற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் வேகமாக நகரும் சமுதாயத்தில் வர்க்க இடைவெளி அதிகரித்து, எதிர்கால தொழில்துறை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு, முடிவில்லா போராட்டங்கள் நடைபெறுவது பொதுவான நிகழ்வாக மாறுவதை தவிர்க்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக நாடு முழுவதும் 450 பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையான வதிவிடப் பயிற்சியை வழங்கிய பின்னர், அனைத்துப் பாடசாலைகளிலும் முதன்மைப் பிரிவின் முதல் வகுப்பிற்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாகாண ரீதியாக நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நெறிகளின் பின்னர், 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget