Ads (728x90)

டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க் கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை ஊடகங்கள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ட்விட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் எனவும் அவர் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். 

இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கி சேவையிலிருந்து வெளியேறப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

அவர் அந்நிறுவனத்தின் 7,500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றும்  திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget