வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துகொள்வதில் இருந்த வரையறைகளை கொண்ட சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பி.அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த வரையரையை தளர்த்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்று நிருபம் இலங்கையர்களை திருமணம் செய்வதற்கு தயாராகும் வெளிநாட்டவர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக எந்தவொரு குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று பாதுகாப்பு துறையிடமிருந்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமாகும் போன்ற நிபந்தனைகள் காணப்பட்டது.
இவ்வாறு வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் குறித்த வரையறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment