Ads (728x90)

இலங்கையின் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் சீன கடற்படையின் கப்பல்களுக்கு இரகசியமாக ஆழ் கடலில் எரிபொருட்களை நிரப்பி வருவது குறித்து இலங்கையிடம் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் வெளிப்படையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கொண்டு வருமாறு இலங்கையை புதுடில்லி கேட்டுக் கொண்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இலங்கை கப்பல்கள் எரிபொருளை ஏற்றி வருவதும், சீனப் போர்க்கப்பல்களுக்கு ஆழ்கடலில் எரிபொருள் நிரப்புவதும் இந்தியா மற்றும் அமெரிக்காவை கவலையடையச் செய்துள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget