தரம் 01 மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் 2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் விரும்பிய க.பொ.த உயர்தரப் பாடங்களை உள்ளடக்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என்றும், இச்செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு மூன்றாம் கல்விப் பருவம் முடிந்த பின்னர் மார்ச் 24ந்திகதி அன்று தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment