யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்துக்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேபோன்று சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வாரத்தில் 4 நாட்கள் சேவை இடம்பெறும் என குடிசார் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் விமானம் முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும், பலாலி விமான நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment