ஒக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதுவாகும். செப்டெம்பர் மாதத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு தனிநபருக்கு ரூ.13,772 தேவையென திணைக்களம் கணக்கீடு செய்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் படி கொழும்பில் வசிக்கும் ஒரு நபருக்கு அடிப்படைத் தேவைகளுக்கு ரூபா 14,894 தேவைப்படுவதாகவும், மொனராகலையில் வசிக்கும் ஒருவருக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்குள் ரூபா 13,204 தேவை என கண்டறியப்பட்டுள்ளது. .
இதன்படி தற்போது இலங்கையில் மொனராகலை மலிவான மாவட்டமாகக் கருதப்படும் அதேவேளை கொழும்பு வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 55,240 தேவைப்படும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment