அரச பணியாளர்களது கட்டாய ஓய்வு வயதெல்லையை நடைமுறைப்படுத்தும் போது, வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களுக்கு விலக்களிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, அரச பணியாளர்களது கட்டாய ஓய்வு வயதை 60ஆக குறைத்து வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக விசேட வைத்தியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதி பேராணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரையில் இந்த நடைமுறைக்குள் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளீர்க்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Post a Comment