இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 80 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் தவிர்ந்த மொத்தமாக பாராளுமன்றத்திலுள்ள 224 எம்.பிக்களில் 205 பேர் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டதோடு, 19 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment