நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையும் இதற்கு காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நேற்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரச்சுட்டெண் 150 – 200 வரையாக காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
வளி மாசடைதல், சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை வீடுகளிலிருந்து வௌியே செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் பொதுமக்கள் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ள நிலையில் வடமாகாண மக்கள் முகக்கவசங்களை அணியுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment