இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை வழங்கும் நெறிமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது மாணவர்களின் உளநலத்தை கருத்திற் கொண்டு முதலில் பகுதி II வினாத்தாளும், பகுதி I வினாத்தாள் பின்பும் வழங்கப்படவுள்ளது. இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கு தனியான பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிணங்க டு, காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Post a Comment