Ads (728x90)

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் இந்த பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget