நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்படக் கூடியவையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியோ, அமைச்சர்களோ கொழும்பிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு உச்சபட்ச சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கிடைக்கச் செய்யும்படி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Post a Comment