Ads (728x90)

ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்ட கொழும்பு - மாலம்பேயிற்கு இடையிலான இலகுரக புகையிரத சேவை திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடெனகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ருவான் விஜேவர்தன மற்றும் ஜப்பான் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஜப்பான் துதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போதே ஜப்பான் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு திட்டங்களின் ஊடாக உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்ததாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதும் இந்த வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்ததாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget