Ads (728x90)


இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இலங்கையர்களுக்கு ஈ-விசா வழங்கும் முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. இது தொடர்பான டுவிட்டர் செய்தியொன்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

சுற்றுலா, வர்த்தகம், மாநாடு ஆகிய தேவைகளிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதிகள் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget