மியான்மரில் வாழ முடியாமல் மலேசியா நோக்கி பயணித்ததாகவும், தமது பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தமது பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104 ரோஹிங்கியா அகதிகள், பாதுகாப்பான வாழ்க்கை தேடி மலேசியாவிற்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற படகு பழுதடைந்து நேற்று முன்தினம் மாலை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் ஒதுங்கினர்.
அவர்கள் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் ரோஹிங்யா பிரஜைகள் 103 பேரை மிரிஹானை தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட படகோட்டியாக செயற்பட்டதாக கூறப்படும் இலங்கையரை மட்டும் 14 நாட்களுக்கு விலக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment