Ads (728x90)

இலங்கை மாணவர்களுக்காக ரூபா 5 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

சீனாவினால் பரிசளிக்கப்படும் பாடசாலை சீருடைப் பொருட்கள் 2023ஆம் ஆண்டில் இலங்கையின் 70% மாணவர்களின் சீருடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனத் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

20 கொள்கலன்களில் 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் நிறைவுப் பொருட்களான ஷேர்ட்/கவுன் - வெள்ளை, 2,374,427.5 மீற்றர், கால்சட்டை - வெள்ளை, 350,031.5 மீற்றர், கால்சட்டை - நீலம், 150,003.5 மீற்றர், ரோப்-ஆரஞ்சு, 138,134 மீற்றர் கொண்ட முதல் தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget