நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வித்தியாலய அதிபர் பூலோகராஜவிடம் வித்தியாலய வளாகத்தில் வைத்து கையளித்தார்.
சஜித் பிரேமதாச அவர்கள் மாணவர்களின் வாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி மற்றும் உமாசந்திர பிரகாஸ், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment