Ads (728x90)

2021 (2022) ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய வறிய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.

எனவே இப்புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப் படிவத்தை பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று, முறையாக பூர்த்தி செய்து குடும்ப பொருளாதார நிலைமை குறித்த கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுக் கடிதம் ஆகியவற்றுடன் 23 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

பின்னர் இவ்விண்ணப்பப்படிவங்கள் பாடசாலை அதிபர் மூலமாக வலயக் கல்வி அலுவலகத்துக்கூடாக ஜனாதிபதி அலுவலகத்திடம் கையளிக்கப்பட வேண்டும்.

எனவே காலதாமதமின்றி புலமைப்பரிசில் வழங்கும் இவ்வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்காக, அனைத்து விண்ணப்பங்களையும் பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு நாம் விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கல்வி வலயத்திலுமுள்ள 30 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை, அவர்களுக்காக மாதாந்தம் 5,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget