Ads (728x90)

ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் தவணைப் பரீட்சைகளை நடத்தாது, பாடங்களுக்கு புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாடரீதியாக வழங்கப்படுகின்ற புள்ளிகளை வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து அதனை இரண்டாக பிரித்து மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பாடசாலையை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


Post a Comment

Recent News

Recent Posts Widget