எந்த அளவிற்கு எதிரப்பு சக்தியை அதிகரிக்க உணவுகளை எடுக்கின்றோமோ அதே அளவிற்கு ஒரு சில தேவையற்ற உணவுகளை தவிர்ப்பதும் நம் உடலுக்கு நல்லது. ஏனெனில் நமக்கே தெரியாமல் நாம் சாப்பிட கூடிய ஒரு சில உணவுகளால் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ், கேக், ஜூஸ் வகைகள் போன்றவற்றில் இனிப்பு அதிக அளவில் சேர்த்து தயாரிக்கப்படுவதனால் பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் . மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
கேக், ரொட்டி, பரோட்டா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை அனைத்தும் உடலுக்கு தேவையான எந்தவித சத்துக்களும் இல்லாத மைதா மாவை கொண்டு தான் தயாரிக்கிறார்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. கல்சியச் சத்தை அகற்றி எலும்பை அரித்து விடுகிறது. செரிமான பிரச்சனைகளை உருவாக்குகிறது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் இதயக்கோளாறு, பெண்களிடையே மலட்டுத்தன்மை, நீரிழிவு, அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து உடலின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடுகிறது.
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து விடுகிறது.
அதிகமாக காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது இதய இரத்த நாள பிரச்சனை உருவாகிறது. மேலும் மன நலத்தை பாதிக்கும். மேலும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். தசை முறிவை ஏற்படுத்துகிறது. அதிகமாக காபி குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழி வகுக்கும்.
குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட பழைய உணவுகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்த பழக்கம் தொடரும் போது வயிற்று போக்கு, வாந்தி, குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை, தோல் நோய் உள்ளிட்ட பல தீமைகள் ஏற்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணற்ற கிருமிகள் மறைந்திருக்கும். அதை நாம் உட்கொள்ளும் பொழுது பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் உடலுக்குள் எளிதாக நுழைகிறது. இதனால் பல நோய்கள் எளிதில் நம்மை தாக்கிவிடுகின்றது.
Post a Comment